உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மொழியே முகவரி

மொழியே முகவரி

இரா.விஜயகௌரி மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி கொடுத்தலில் விரித்தெழும் குமுகாய பெருவழி செழிப்பாய் மொழிதலில் சிந்திடும் அமிழ்தென அள்ளிட அள்ளிட குறையாச் செல்வமாய் அட்சய பாத்திர தலைமுறை புதையலாம் சுவைபடச் செப்பிட செந்தமிழ் இனித்தெழும் குழந்தைகள் குலவிடின் குவலயம் நிலைத்திடும் இயல்புற மொழிதலும் அழகுற இழைதலும் நாளும் நாளுமே நயம்பட விதையுறும் கொடுப்பதில் குறைவரின் முகவரி சிதைந்திடும் உறவின் பின்னலே குழைந்திடிம் மொழிதனில் உதிரத்தில் பின்னிய போராட்ட பெருவெழி மொழியின் முகவரி தொலைத்து நாம் மாள்வதோ தேனினும் இனியதாம் சொத்தினை இழப்பதோ குழந்தைகள் செவிதனில் நித்தமும் செப்புவோம்