உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மொழியும் கவியும்

மொழியும் கவியும்

கவி 759 மொழியும் கவியும் வெள்ளமென உள்ளமதில் எண்ணங்கள் உதித்திடும் சொல்லெல்லாம் சுவையேற்றி கவிகளை வரித்திடும் தீட்டித்தீட்டி சொற்களை அமைத்துவிட பாவுக்குள் கேட்டுவிடவே அதனை தேனூறும் காதுக்குள் சிந்தையினை குடையக் குடைய அமுதூறும் விந்தைப் படைப்புக்களாய் அகிலத்தில் அச்சேறும் தேன்கவிகள் படைத்திட்ட புலவர்களாம் பிறப்பு வான்புகழைக் கொண்டுள்ள தாய்மொழியாலான சிறப்பு கற்பனை என்பது அற்புதமான சக்தி உற்பத்தி செய்துவிடுமதை தமிழெனும் புத்தி தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி தித்திக்கும் செய்யிழுக்குள்ளும் தமிழரின் மதி செய்யுழுக்குள் செருகிக்கொண்டு மொழிசெய்யும் அழகு மெய்யாக சொக்கவைக்கும் கவிதைகளின் உலகு சொல்வளத்தை கூட்டியே எழுதப்படும் பாக்கள் கொள்ளை அழகு கொட்டிக்கிடக்கும் பூக்கள் இலக்கிய நயங்களாகிய சொல்லாட்சி எழிலே இலகுவான நடையிலும் படைத்துவிடும் கவித்தொழிலே படைத்துவிடும் படைப்புகளிலெல்லாம் மொழியின் ஆட்சியே கிடைத்துவிடும் முகவரிகளெல்லாம் மொழியின் மாட்சியே ஜெயம் 30-01-2025