உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மே தினமே மேதினியில் (712)

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர் பேதமின்றி மேன்மை கொண்டு வந்தாயே உழைப்பு என்னும் மூலதனம் உந்து சக்தியாய் சாதனம் உயர்ந்து செல்லும் வேதனம் உறுதியாய் நின்றிடும் ஆதனம் வல்லரசு நாடுகளின் எதிர்ப்பு வன்மையான பலமான புறக்கணிப்பு மானிட ஆரோக்கியத்தின் பாதுகாப்பு மணித்தியாலம் நிர்ணயக் குறைப்பு கண்டனம் ஆர்ப்பாட்டக் கூட்டம் கட்டாயவேலை ஒழிக்கும் திட்டம் கண்டங்களிடை வேறுபட்ட சட்டம் கனத்த இதயத்துடன் கடந்திடும் நாளும்