உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மூலதனமே முதலீடு

மூலதனமே முதலீடு

வசந்தா ஜெகதீசன் தேவைக்கு ஏற்ப தேவைப்படும் தேசங்கள் முழுதும் தேடப்படும் மூலப்பொருளாய் மூலதனம் வாழ்வுக்கும் இதுவே அத்திவாரம் உறவுக்குள் உரிமைக் குரல் எழுப்பும் நல் நட்புக்கும் நம்பிக்கை மூலதனம்அறிவுக்கு கல்வியாய் அடிபதிக்கும் அன்புக்கும் இதுவே அடிப்பலம் காலத்திற்கு நேரம் மூலதனம் இன்றைய சூழலின் எழுச்சிக்கும் ஊடகப் பணிகள் மூலதனம் ஓற்றுமைக் குரலை ஒன்றிணைக்கும் அளப்பெரும் சேவையின் ஆதாரம் காத்திடம் அறிந்து கருக்கொண்டு காரியம் ஆற்றிடும் பணம் என்ற ஓன்று மட்டுமல்ல பற்பல வளங்களும் மூலதனம் உடலுக்கு உயிரே மூலதனம் ஆரோக்கியம் வாழ்வின் மூலதனம் அன்பே அறத்தின் முதலீடு! நன்றி