உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“மூப்பு வந்தாலே”

“மூப்பு வந்தாலே”

நேவிஸ் பிலிப் கவி இல (501) மூப்பு என்பது மனித வாழ்வில் இறைவன் தந்த வரம் இறுதிக்காலம் யாருக்கும் எப்போதும் வரலாம் ஆனால் திடீரென் வருவதல்ல மூப்பு ஒழுங்கமைந்த வாழ்வில் பதற்றமின்றி சீராக எம்மை வந்தடைவது கால ஓட்டத்திலே ஆதங்கமுடன் அல்லலுற்றாலும் முழுமையாய் எம்மை ஆரத் தழுவிக் கொள்வது அன்பின் அர்த்தங்களை அறிந்து புரிந்து பகிர்ந்தும், ஆற்றாமையின் முக்கல் முனங்கல்களை தாங்கியும் நிதானமாய் வருவது வேரின் மணம் போல குணம்தனை இழக்காது தற்செயலாய் வந்து திடுக்கிடவும் வைக்காது பொறுமையின் நிறைவில் முற்றிய கனிபோல கருணையின் விதைகளை தன்னகத்தே தாங்கி நிற்பதே முதுமை நன்றி.