உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மூத்தோர் 104

மூத்தோர் 104

ஜெபா ஸ்ரீதெய்வீகன் 17-03-2025 நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே உரைத்த மொழியே உலகின் நெறியே உமக்கிணை அறிவுரை தர யாருளர் எமக்கும் தந்து எம்மை உயர்த்துவீரே பழுத்த இலையாய் பாரினில் வீழ்ந்து விழுந்த இடமே விதையாய் எழுந்து உலகின் பெருமை உணர்த்தும் ஒளியே மலரின் அழகாய் மலர்ந்து வரவே காலத் தழும்புகள் காட்டும் கதையோ ஞாலம் தரும் நல் முகவரியோ முகமலர்வு கொண்டு பேணிக்காக்க நகல் போல் நம்பிள்ளை தொடருமே முதியோர் கதை மௌனமாய் உறங்க மதிப்போர் வாழ்வு மலர்ந்து விளங்க மூத்தோர் போற்றி வணங்கி வர புத்தகங்கள் தேவையில்லை எமக்கே