உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முள்ளி வாய்க்கால் நினைவு

முள்ளி வாய்க்கால் நினைவு

முள்ளி வாய்க்கால் நினைவு தினம் 316 ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து ஈழப்போரின் இறுதிக் கட்டமது பாழாய்ப் போன இனவெறித் திட்டமது வாழவழிவிடாது அழித்த கொட்டமது தமிழன் என்றே துரத்தித் துரத்தி முழுதாயக் கூறாக்க கொத்துக் குண்டுகள் வீசி உடல் சிதறிய தினமது மே 18 மறக்க முடியாத வலியது 2009 இல் துறந்த பரிதாபப் பலியது பதுங்கு குழி ஒதுங்கிய பச்சிளம் பாலர், முதியோர் வரை கதறக் கதற உடல் கிழித்து சதை தொங்கக் கொன்று குவித்த கூலிப்படையது உயிரோடு புதைந்த மாவீரர், வயிறு எரிய சிதைந்த மழலை, மாந்தர் சிதறிய உதிரம் கொதித்தெழுந்த கருகிய உடல் சதை பிழிந்து ரத்தம் குடித்தவரைப் பழி வாங்குதே உலகெங்கும்.