உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முற்றத்து நிலவு

முற்றத்து நிலவு

ராணி சம்பந்தர் முற்றத்து நிலவில் நம் மூதாதையர் கற்றுத் தந்த அறிவுரைக் கதைகள் இற்றைவரையும் காதில் கேட்குதே சுற்றும் விண்வானத்து வளவுக்குள் பற்றிவரும் வான்மதிக்குள் பாட்டி ஒருத்தி குந்தி இருந்து பாக்குரலில் இடிப்பதாகச் சொல்லி கண்ணாடியில் வாளித் தண்ணீருக்குள் பிடித்த நிலா பற்றாத உயரத்தில் நின்றது காட்டிய வெளிச்சத்தில் இடியப்பம் ,சொதியும் குழைத்து ஊட்டி வளர்த்த மழலையும் பொக்கை வாய் திறந்து சிரித்து மகிழ வெற்றுச் சோற்றுப் பானை சுரண்டிய அடிச்சோற்றில் மிஞ்சிய சட்டிக்கறியும், மரவெள்ளிக்கிழங்கும் பிசைந்து பிடி, பிடி என முற்றத்து நிலவில் அமர்ந்து தந்ததும் இறுதி உருண்டை கடைக் குட்டிக்கு என எனக்கே தந்ததுமே அரை வயிறு நிறைந்திருந்தும் முழுதாய் நிறைந்ததே அம்மாவின் அன்போடும் கூட்டாக இருந்துண்டதும் முற்றத்து நிலவில்.