உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முயற்சி தரும் பயிற்சி

முயற்சி தரும் பயிற்சி

ராணி சம்பந்தர் வெட்டி வீழ்த்தப்பட்டாலுமே பட்டுப் போய் கெட்டு விடாது முட்டும் வேரிலிருந்து மண் புட்டுக் கொண்டு வரும் புது மரமே தளராத சாட்சி ஆவலாக இருக்கும் போதே சின்னக் குட்டிக் குழந்தை கூட அரைத்தூக்கம் எழுந்து அரை- குறையாகப் பேச எத்தனிப்பது மனம் அயராத முயற்சி ஏழையாக இருந்து கொண்டே வழமையாக வாழுகிறேன் என சொல்லி இருட்டோடு வந்திடும் சிரிப்போ உயராத தளர்ச்சி தொடவே முடியா என நினைத்த நிலவில் போய் காலடி வைத்த துணிவான மனிதனின் பயிற்சி எதிலும் பணிவோடு இறங்கிடத் தானாகப் பழகிட வெற்றி தருமே முயற்சி எனும் பயிற்சி .