உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முயற்சி உயர்ச்சியின் மூலதனம்

முயற்சி உயர்ச்சியின் மூலதனம்

சக்தி சிறினிசங்கர் சரியும் தவறும் கலந்தது வாழ்க்கை கரிசனை வேண்டும் கனியது காண மழையாய் புயலாய் மிடிகள் இடியாய் உளைச்சல் தந்து உரசிடும் வேதனை அழியா மனத்திடம் அறிவும் செயலும் எழிலாய் மலரும் என்றும் வாழ்வு தோல்வியை ஏற்று தொடர்நடை போடக் கால்கள் ஊன்றிக் கடக்கணும் தடைகளை உடைத்து வாழ்வில் உயர்ந்திட என்றுமே இடைவிடா முயற்சியில் இமயம் தொடலாம் சிலையை வடிக்கும் சிற்பியின் முயற்சி வலையைப் பின்னும் சிலந்தியின் முயற்சி திருவினை ஆக்கும் திண்ணமே உணர்வாய் ஒருமுறை அல்லப் பலமுறை சிந்தி ஓய்ந்து போகாது ஆர்வம் கொண்டே மாய்ந்து மாய்ந்து முயற்சி செய்தால் ஆய்ந்து கொள்ளலாம் வெற்றிக் கனியை!