உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முயற்சியே பலம் முனைப்பே திடம்.....

முயற்சியே பலம் முனைப்பே திடம்.....

ரஜனி அன்ரன்( B.A)..முயற்சியே பலம்....... 21.05.26 முயற்சியும் முனைப்பும் வெற்றியின் திறவுகோல் முயன்றால் எதுவும் முடியுமெனத் திடம்கொண்டு இலக்கினை நோக்கி நகர்ந்தால் வெற்றி நிட்சயம் சாமான்யர்களும் சாதனையாளராகலாம் சரித்திரம் படைக்கலாம் முனைப்போடு செயற்பட்டால் ! முயற்சியென்பது வித்து முனைப்பென்பது சத்து வித்தும்சத்தும் பலமானால் விருட்சமாகுமே வாழ்வு விரைவாய் கிடைக்குமே வெற்றிக்கனியும் வெறும் ஆசைமட்டும் போதாது முனைப்பு திடமானால் முயற்சியே பலம் ! நடக்கும் கால்களோ முயற்சி இலக்கினை நோக்கிடும் கண்களோ முனைப்பு முடியாதென்பது சோம்பலின்வேதம் முடியுமென்பது வெற்றியின்கீதம் அயரா முயற்சியும் தளரா முனைப்பும் வெற்றியின் தாரகமந்திரம் பற்றியே தொடர்வோம் முனைப்போடு முயற்சியே பலம் முனைப்பே திடம் ! https://www.youtube.com/watch?v=0Dq7XCoFFG8