உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முடிவில்ஒன்று

முடிவில்ஒன்று

வியாழன் கவி 2079.. முடிவில் ஒன்று ஆண்டு ஒன்றின் மடிவு அடுத்த அகவை பிறப்பு ஒன்றின் முடிவில் ஒன்று அதுவே வாழ்வியல் பிரிப்பு.. கடந்து வந்த பாதையில் கடக்க முடியாச் சோதனைகள் முடங்கிப்போன சிந்தனைகள் முழுமை பெறாத செயல்பாடுகள்.. பூத்திடக் காத்திருக்கும் புதிய ஆண்டே உன் மடியில் தஞ்சம் கோரி நாமிங்கு அஞ்சுகம் போலவே தவழ்ந்திடவோ.. காத்திருப்பும் சுகமாகும் காலச் சுழல்வின் ஆதாரம் முடியாதெழுதிய விதியின் வரி முழுமை பெறட்டும் பிறந்திடுவாய்.. சிவதர்சனி இராகவன் 26/12/2024