உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முகவரிக்கு மூலமே நீயின்றி நகராது நாளுமே

முகவரிக்கு மூலமே நீயின்றி நகராது நாளுமே

கவி 736 முகவரிக்கு மூலமே நீயின்றி நகராது நாளுமே அணுவணுவாய் இரசித்தேன் உள்ளமதில் குடிவைத்தேன் ஓயாமல் காதலித்தேன் எண்ணத்தில் பதித்தேன் கருத்தினில் புதைத்தேன் அனுதினம் நினைத்தேன் உயர்வெனவே மொழிந்தேன் அள்ளியள்ளி புசித்தேன் பசியாறி மகிழ்ந்தேன் அமுதென்று மொழித்தேன் வரமென அறிந்தேன் வளமென உணர்ந்தேன் அறிவெனப் புகழ்ந்தேன் வாழ்வாக்கி கழித்தேன் மூச்சாக்கி சுவாசித்தேன் பேச்சாக்கி பெருமையடைந்தேன் சிந்தனைக்குள் சிக்கவைத்தேன் படைப்புக்களாய் ஈன்றெடுத்தேன் கலைஞனென பெயரெடுத்தேன் தெரிந்தவனாய் காட்சியளித்தேன் புலம்பெயர்விலும் தலைநிமிர்ந்தேன் அமிழ்துக்குள் அமிழ்ந்தேன் அனுபவித்தே எழுந்தேன் கிள்ளியெடுக்கவே நுழைந்தேன் அள்ளிக்கொடுத்திட மலைத்தேன் உயிரெனவே உச்சரித்தேன் உருக்கிவிட கரைந்தேன் இறைவனாக்கி விசுவசித்தேன் தந்தையாக்கி துதித்தேன் அன்னையாக அரவணைத்தேன் ஆசானாக மதித்தேன் உறவாக்கி உபசரித்தேன் ஊறிக்கொண்டே வருந்தேன் இதுவிருக்க விருந்தேன் வருத்தத்திற்கும் மருந்தேன் கவலைகளை மறந்தேன் வாய்விட்டே சிரித்தேன் சொத்தெனவே சேர்த்தேன் சொந்தமாக சேர்ந்தேன் சொர்க்கத்துக்குள் வசித்தேன் சுகங்களுக்குள் கசிந்தேன் மனத்தோடு அக்களித்தேன் படைத்துப்படைத்து களித்தேன் அறியாமையைக் கலைத்தேன் புதுமைகண்டு மலைத்தேன் புதியவைகளாய் பிரசவித்தேன் நாவைக்கொள்ளைகொண்ட சுவைத்தேன் நாளும்பொழுதுமாய் சுவைத்தேன் எல்லாமேயிதுவென முடிவெடுத்தேன் ஜெயம் 01-08-2024