உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" மாவீரர் ஈகம் "

" மாவீரர் ஈகம் "

“ மாவீரர் ஈகம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 21.11.2024 மாவீரர் ஈகம் மகத்தான தியாகம் சாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த பயணம் தாய்த்தேசம் தனைமீட்க தேசீயத்தின் கனவை நனவாக்க தேகத்தையே ஈகம் செய்த தேசமைந்தரின் தியாகமெல்லாம் பேச வைக்குதே கார்கால கார்த்திகையில் ! உன்னத இலட்சியத்திற்காக இலட்சியத்தின் வெற்றிக்காக இறுதி மூச்சு வரை போராடி உறுதியோடு மண்ணை முத்தமிட்ட உன்னத மறவர்களின் ஈகம் ஈடிணையில்லா வரலாற்றுக் காவியம் ! தாய்த்தேசத்தின் தாகம் தீர்க்க தம்முயிரைப் பணயம் வைத்து நீதியின் பாதையில் நடந்து நெஞ்சினில் தீயினை ஏந்தி புறநானூற்று வீரம் காத்து ஈகம் செய்த புதுநானூறு படைத்த மறவருக்காய் தீப ஒளியேற்றி விழிகளை ஒளிர வைப்போம் ! https://www.youtube.com/watch?v=KBV4JOOwJik