உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாற்றம்

மாற்றம்

05.09.24 மாற்றம் ஆக்கம் 328 மாற்றம் வேண்டும் என்று சீற்றம் காணும் மனம் நினைக்குது ஏற்றம் கண்ட காலநிலை கொதித்துச் சீறிக் கனக்குது புயலோடு , மண் சரிவு பெருவெள்ளம் பூகம்பம் கடும் வெப்ப அழிவில் இறப்பு போராடுது புதுப் புது நோய் தொற்ற தடுப்பூசி தொடுத்த வேறு நோயால் அல்லலுற மாந்தர் நிலை கூறாகுது சில நாடுகள் தேர்தல் தில்லுமுல்லு சீர் கெட்டு மது போதை உரமாக மாற்றம் காணாது மாண்டு போகுது வல்லரசு நாடுகளோ ஆயுத விற்பனையில் சாதனை புடைத்த போர் விமானக் குண்டு வீச்சில் துவண்ட துன்பமோ தூக்கில் தொங்குது மாந்தர் மன அழுத்தம் மன அமைதியின்றிப் பிறக்கும் குழந்தைகள் உடல் உறுப்பில் செயல் இழந்து போராட வரண்ட வாழ்வில் திரண்ட மாற்றம் மாற வேண்டுமே .