உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாற்றம்

மாற்றம்

மாற்றம் காலத்தின் கோலம் ஞாலத்தில் மாற்றம் கடுகதியான தாக்கம் கடப்பதால் ஏக்கம் காற்றோடு புயலும் மழையாய் வெள்ளமும் மாற்றம் கண்டதால் கனதியாய் மானிடம் பருவங்கள் பலதும் படிபடியாய் மாற்றம் பட்டினியின் விழிம்பில் பரிதவிக்கும் உயிர்கள் பயிற்ச்செய்கை அழிவும் பகலவனின் மாற்றம் பகல் இரவாய் மாறும் பனிபொழிவு காணும் உலகப் பூமியில் ஆட்சிகள் பலமும் உருட்டு பிரட்டால் சிதறும் கட்சிகள் உரசி விட்டும் பற்பல அரசியல் உன்னத போட்டியில் முரணாகும் மாற்றம் நாட்டுக்கு நாடு மாற்றத்தின் வளர்ச்சி சோற்றுக்கு கூட வழியின்றி தளர்ச்சி கூடுவிட்டு கூடுமாறும் மானிடத்தின் சுழற்ச்சி ஏட்டினிலே எழுதிடலாம் எண்ணத்தின் மாற்றமே