உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாற்றம் ஒன்றே

மாற்றம் ஒன்றே

ஜெயம் தங்கராஜா ஒரு மனிதனுள் ஏற்படும் மாற்றம் அதுவே அவரை வாழ்க்கையில் முன்னேற்றும் இதுவே வெற்றிக்கான மாறாத தேற்றம் பொதுவாய் தத்துவ ஞானிகளின் கூற்றும் உலகம் வேகமாக மாறிவருகின்றது உண்மை சில பின்னடைவாயினும் புதுமையாகும் தன்மை வளர்ச்சி இங்கே எதனால் சாத்தியம் உளத்தை சரிசெய்தால் அனைத்தும் சாத்தியம் வற்புறுத்தல் இல்லாமல் விரும்பியே மேற்கொண்டு இற்றைவரை காணாத உற்சாகங்களைக் கண்டு இயற்கைக்கு மாறாக வாழ்வதை தவிர்த்து வயதுக்குள் மாறுவதே வாழ்க்கைக்கு விருந்து சூழ்நிலைக்கேற்ப மாற்றம் இங்கே நிகழ்கின்றது வாழ்நிலைக்குள் நல்லதோ தீயதோ விளைக்கின்றது