உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாற்றத்தின் ஒளியே 783

மாற்றத்தின் ஒளியே 783

ஒவ்வொரு தோல்வியும் ஒரு கதவாய் திறந்தது, ஒவ்வொரு முயற்சியும் ஒரு பாதையாய் பிறந்தது சுமையாக இருந்த நினைவுகள் தமை காற்றில் கரைந்தன கண்ணீராய் விழுந்த வலி பின்னாளில் ஞானத்தை பகிர்ந்தன வீழ்ந்து கிடக்கையில் துணிச்சல் முளைத்தது தாழ்ந்தே உயர்ந்திடினும் பணிவு நிலைத்தது மாற்றம் வந்தது இடித்துச் சிதைக்க அல்ல ஏற்றிவிட்டு என்னை புதுப்பிக்கவே மெல்ல நேற்றைய நிழலின் மேல் இன்று நிற்கவில்லை தோற்காத நாளின் வெளிச்சத்தின் வாசலின் எல்லை மாற்றத்தின் ஒளியே என் பயங்களை துரத்து ஓட்டியே பலவீனங்களை பலத்தினை நிரப்பு ஜெயம் 15-01-2026