உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாற்றத்தின் ஒளியாய்.......

மாற்றத்தின் ஒளியாய்.......

ரஜனி அன்ரன் (B.A) " மாற்றத்தின் ஒளியாய் " 15.01.2026 மார்கழிப் பனியின் திரைவிலக்கி மானிட வாழ்வினை வனப்பாக்க மங்கலமாய் வந்துவிட்டாள் தைப்பாவை இருண்ட வாழ்வினில் உழன்றமானிடம் ஒளியின் திசையில் தடம்பதிக்க ஒளிமயமான வாழ்வுசிறக்க மாற்றத்தின் ஒளியாய் மலர்ந்துவிட்டாள் தைப்பாவை ! விண்ணில் ஒளிரும் செங்கதிர்வீச்சில் மண்ணில் மலர்ந்தது தைத்திருநாள் இனிக்கும் மாற்றத்தின் தொடக்கமிது மனதினில் தேக்கிய கவலைகள் ஒழிய மாற்றத்தின் ஒளியாய் உதித்திடும் விடியல் மாந்தர் வாழ்வில் மங்கலம் பொங்கட்டும் பொங்கு தமிழாகப் பொங்கி வழியட்டும் ! சுழலும் உலகில் மாற்றமே வாழ்க்கை உழலும் வாழ்வில் உயர்வே வெற்றி மாற்றத்தின் ஒளியாய் மலரட்டும் வாழ்வு ! https://www.youtube.com/watch?v=W0CTIHg1e5I