உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாறியதே வாழ்க்கை

மாறியதே வாழ்க்கை

கவிதை 810 பகுதி 1 விடியும் முன்பே விழித்துக்கொண்டு விரைந்து ஓடும் மானுட வாழ்வு நேரம் போட்டு கடிகாரதின் கட்டளை அதற்கு அடங்கி கால்கள் நடைபோடும் அலாரம் கத்தி காலையில் எழுப்பும் கண்ட கனவும் இடையிலே நிற்கும் பணம் தேடி ஓடும் கால்கள் இதுவென வாழ்க்கை கரைந்திடும் நாட்கள் இன்பம் மறந்து உழைப்பே கதியாக அன்பின் மொழிகளும் சுருக்க செய்தியாக செயற்கையாக இன்று சிரிப்பும் மாறியதே அருகிருக்கும் உயிரான உறவுகளும் அந்நியமாகியதே ஜெயம் 15-07-2026