உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாறியதே வாழ்க்கை

மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய் மிதக்கும் நாகரீக மோகமும் சேர்ந்து தேடிய வாழ்வல்ல இது தேடிப் பெற்ற வாழ்வாக கூடியே வாழ்வுமில்லை குதூகலம் மனங்களில்லை மாறியதே வாழ்வு மாற்றங்கள் மணிக்கணக்காய் ஆளுமைகள் ஆற்றல்கள் அதிகரித்தாலும் அப்புவும் ஆச்சியும் இல்லாத வாழ்வு மாற்றங்களே வாழ்வாக மாறியதே புலத்து வாழ்க்கை தேற்றமாய் ஏற்றுக்கொண்டு தேசத்தில் வாழ்வோமே! மாற்றம் வாழ்வில் வேண்டும் மனமாற்றம் இன்றி உலக மாற்றத்துடன் உள்ளுர சேர்ந்து வாழ்வோம். நகுலா சிவநாதன் 1864