உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாமருந்து

மாமருந்து

ஆறறிவு மனிதருக்கு ஆண்டவனருளிய அன்பளிப்பு அகத்தினழகை முகத்தில் காட்டும பற்றிக் கொள்பவரை தொற்றிக் கொள்ளும் விலை மதிப்பில்லாதது விற்பனைக்கு வராதது மனித குலத்திற்கே உரித்தானது உடல் நல வாழ்விற்கு சத்தானது இன்முகம் காட்டி நன் மனம் சேர்க்கும் நோய்களே இல்லா பேரின்பம் காட்டும் சோதனை வரும்கால் துணையாய் காக்கும் வேதனை தீர்க்கும் நட்பாய் மாறும் வேறெந்த உயிரிலும் இல்லாத ஒன்று நம்மிடம் இதை விட வேறேது நன்று எம்மோடு பிறரையும் இன்புற செய்யும் முகம் மலர்ந்து சுகம்தரும் நல் மருந்து அதுவே சிரிப்பென்னும் மாமருந்து நன்றி வணக்கம்.