உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாதவமே உந்தனை

மாதவமே உந்தனை

மாதவமே உந்தனை மனமார நினைத்தவண்ணம் சாதனைகள் பலசெய்து சரித்திரம் படைத்துவிட்டீரே கோதண்ட ராமனைப்போல் களத்தில் நின்றபடி சாதரணசெயலாய் நினைத்து சந்தடி இன்றியே சென்றுவிட்டீர் குண்டுகள் போட்டுத் தகர்த்தாலும் குனிந்து நிற்காது நிமிர்ந்து நின்று வென்று களமாடியவரே உந்தனை என்னவென்று வியந்து போற்றுவோம் தாய்மண் மீட்பிற்காய் தம்முயிரை ஈந்த செல்வங்களே சுயநலமில்லா தெய்வீக சேவை எமைக்காக்கும்் அரண்களாக மாறுபட்ட நிலையிலும் மறுக்காது காத்தீரே வீறுகொண்டு எழுந்த வீரவேங்கைகளை காலமெலாம் நினைத்து அஞ்சலிப்போம் ஆராதிப்போம் அனுதினமும் உம்நாம்ம் மாதவமே உந்தனையே ஆயுள் உள்ளவரை.!