உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாதரின் மறுபக்கம்

மாதரின் மறுபக்கம்

நகுலா சிவநாதன் மாதரின் மறுபக்கம் அடுப்படியே தஞ்சமென அடுத்தவேளை உணவாய் ஆக்கிய மாதரின் காலங்கள் மாறின கடமைகள் மாறினவே ஞாலத்தில் இன்று இயந்திர வாழ்கையாகின! புவிதனில் உழைப்பும் பூரிப்பாய் உயர்வும் பெண்ணின் கைகளில் முயற்சியாய் எழ வாழ்கையின்மாற்றம் வண்ணமாய் மாறியதே! எண்ணங்கள் எழில் வண்ணமாய் உயர்ந்தன மௌனத்தின் மொழியான பெண்கள் இன்று கணணியின் கைவரிசையில் உலகத்தின் முன்னணியில்! உள்ளுர காரியமாற்றும் கன்னித்தேவதைகள் மாதரின் மாற்றம் எல்லைகளை கிளித்து வானத்தில் கடலில் மண்ணில் சாதனை மாற்றம் வந்தது மாட்சிமை கொண்டது இன்றைய பெண்கள் இமயத்தின் வளர்ச்சியில் நகுலா சிவநாதன் 1846