உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாதரின் மறுபக்கம்

மாதரின் மறுபக்கம்

வியாழன் கவி 2304 மாதரின் மறுபக்கம்.. நாணயத்தின் இருபக்கங்கள் நாணயமாய் மாதரின் மறுபக்கங்கள் அன்று தொட்டு இன்று வரை அழகியலாய் வர்ணனை வரைபடமாய் விளம்பரங்களும் விற்பனை உத்தியும் ஆடைகளும் அலங்கார நிலையமும் ஆவி பறக்க சமையலும் சாப்பாடும் அத்தனையும் மாதரை நினைவூட்டியதே வானும் நிலவும் ஆறும் நதியும் அலைகடலும் அன்னை வடிவம் என்றார் அந்த மாதருக்கு இழைத்த துயரமுடன் கட்டுக்களுடன் இறக்கை வெட்டியபடி மாதர் விழித்தெழுந்து வினயமாக்கி விரயமாகா ஆடவர் உழைப்பை உயர்த்தி வீடும் நாடும் வளம் பெற முன்னோக்கி தன்பலம் தானுணர்ந்தாள் நிமிர்ந்தாள் கைவிடப்பட்ட அபலைகளும் வாழ்ந்தார் கருத்தரித்த மக்களை சிகரமேற்றினார் ஆளுமையில் அகராதி அமைத்தார் மறுபக்கமுண்டு மனிதா மாதருக்கும்.. சிவதர்சனி இரா 11/3/2026