உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாசி திங்கள்

மாசி திங்கள்

வியாழன் கவி 2292 மாசி திங்கள்.. மாசித் திங்கள் மனதோரம் சாரல் மனதை வருடும் நாட்களின் சேரல் குறுகிய காலத்தின் மென்மைவருடல் அறுதியாய் அழகாய் பிறந்ததே சீராம்.. சிவன் இராத்திரி பக்தியின் இராகம் சிறப்பொடு விழி திறந்தே வாங்கும் வரம் கரங்களில் நம்பிக்கை கூடும் வாரம் குறையேது பன்னிரண்டில் பசும் ஈரம்.. தையுக்கு அடுத்த செல்ல மங்கை மனதை தைத்து நகரும் சிந்தை மூசிப் பெய்யும் பனியின் விந்தை முனகாது பொழியும் பூம்பனி மகிமை.. சிவதர்சனி இராகவன் 19/2/2026