உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு

மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு

வசந்தா ஜெகதீசன் நிலவளம் நீர்வளம் கடல்வளம் எங்கும் கணகற்றுக் கலக்குது மாசுகள் படியுது உற்பத்தித்துறைகள் உருவாக்கக் கழிவுகள் இயந்திர இயக்கத்தின் புகையாகும் மிகுதிகள் தொழில்நுட்ப வளர்ச்சியின் துரிதத்தின் வேகங்கள் கடல்வளம் கலந்திடும் கணக்கற்ற குப்பைகள் நெகிழிகள் நிறைந்திட நீர்வளம் குன்றி தேக்கங்களாகி நுளம்புகள் பெருகி நோய்களின் வரவு நோக்கற்ற வாழ்வு நிலவளம் குன்றி மழைவளம் இன்றி வரட்சியில் வறுமையில் வாடுமே உலகு உற்பத்தி வளத்தை ஊக்குவித்திட மாற்றுத்திட்டமாய் மருந்துகள் ஏற்றியே காய்கறி வருகுது கனிகளும் பெருகுது மாத்திரை உலகாய் மனிதத்தை மாற்றுது மாசற்ற உலகாய் மாற்றியேநோயற்றுவாழ்வோம்! நன்றி