உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

"மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு "

"மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு "

ரஜனி அன்ரன் ( B.A) மாசற்ற உலகே.... 09.04.2026 ஆரோக்கியமென்பது அழகிய பயணம் சுற்றுச்சூழல் சுவாசிக்கும் காற்று சிந்திடும் எண்ணம் உண்ணிடும்உணவு அத்தனையும் தூய்மையாய் இருந்தால் நோயற்ற வாழ்வும் கிட்டும் மாசற்ற உலகையும் கட்டியெழுப்பலாம் ! கழிவுகள் கொட்டாத நதிகளும் கலப்படம் இல்லா உணவுகளும் நெகிழிகள் இல்லா வாழ்வும் நச்சுப்புகை இல்லாக் காற்றும் நோயற்ற வாழ்விற்கு உறுதுணை மாசற்ற உலகிற்கு மாண்பு வருங்காலத் தலைமுறைக்கு இதுவேபரிசு ! காற்றினில் நஞ்சு நீரினிற்கழிவு இதுவே மனிதகுலத்தின் ஆரோக்கிய அழிவு ஆரோக்கியமும் பசுமையும் அனைவருக்கும் கிடைக்கட்டும் மாசற்ற உலகைப் படைப்போம் நோயற்ற வாழ்வினை அடைவோம் மாசற்ற வாழ்வே நோயற்ற வாழ்வின் திறவுகோல் ! https://www.youtube.com/watch?v=Ckp0pYIXCW0