உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மனோகரி ஜெகதீஸ்வரன்

மனோகரி ஜெகதீஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 171 எதிர்ப்பு அலை மாறுபாடு காணின் தோன்றும் எதிர்ப்பு அலை வேறுபட்ட வழிகளில் சீறி வீறுகாட்டுமது மாறுகாட்டுவோர் முன் தோன்றி சேருகூட்டமே நிகழ்த்தும் இவ்வீரிய வதை ஊறுகொடுத்தவர் ஓடுங்கிச் சாயும் வரை பொசுங்கிய உணர்வே பின்னும் எதிர்ப்பு வலை நசுங்கிப் போகுமதில் நசுக்கியவர் தலை பெருவீச்சாய் வீசுகின்றது எம்நாட்டிலும் எதிர்ப்பு அலை சுந்தரம் சுதந்திரம் காக்கவே அந்தரம்தரு வலைவீசுகிறோம் எதிராளிக்கு நடுவீதியில் இறங்கிப் பலமுறை செய்திகள் அதைக் காவும் படை சேர்ந்தே செய்திடக் கிட்டும் விடை புலம்பெயர் எம்உறவுகளே வாருங்கள் ஒருநடை