உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மனோகரி ஜெகதீஸ்வரன்

மனோகரி ஜெகதீஸ்வரன்

பழமை அக்கினிக் குஞ்சுகளின் ஆலாபனை வயிற்றில் அந்தரத்தில் ஆடுகிறோம் பசிக்கயிற்றில் விறகடுப்பை விட்டதனால் விந்தை மளிகைகள் கட்டியதால் நொந்துபோய் காத்திருக்கிறோம் இரவு பகல் எந்திர மனிதராய் வெறுமை முட்டிய எரிவாயுக் கலன்களுடன் வரிசை கட்டி நடுவீதிகளில் இயற்கைப் பசளை விட்டு இரசாயனம் தொட்டு அதன் வரவு கெட்டதனால் விளைவின்றித் தவிக்கின்றோம் விலைவாசி ஏறி மாட்டுவண்டிப் பயணம் மாட்டமென்று விட்டோம் தூரம் சென்றிட ஆகாதென்றே துவிச்சக்கரவண்டியை தூக்கி எறிந்தோம் தள்ளிச் செல்கிறோம் மாடுகள் போன்றே வாகனங்களை எரிபொருளுகாய் ஏக்கமுடன் இன்னும் எத்தனையோ இன்னல் எம் முன்னால் பழமை மறந்த வகையால் பழமை பேணின் வருமோ இவ்விடர்