உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மனமே மனதை அடக்கட்டும்

மனமே மனதை அடக்கட்டும்

நடுக்கடலில் படகு ஆடும்போது ந்ந்திக்கடவுள் வந்து காக்க வேண்டி குந்தியிருந்து கும்பிட்டால் போதுமா மனம் எனும் தோணி அங்கும் மயங்கி நிற்கையில் ஊசலாடும் எண்ணக் கோர்வை எதிர்த்தாட வண்ணம். செய்யலாம் மாயை மனம் ஒரு குரங்காம் பாடினான் கவிஞன் அன்று ஒருநிலைப் படுத்த யோகாவாம் தியானமாம் நிற்குமா நிலையாக கேள்விக் குறியே என்ன செய்தாலும் மனித மனம் அலைபாயுமே தவிர ஒருநாளும் அடங்கி விடாது கண்கூடு ஞானிகளும் மனம் தடுமாறியதுண்டு மனத்தை அடக்க மனத்தால் தான் முடியுமே தவிர வேறு ஒன்றாலும் முடியாது எனவே மனமே மனத்தை அடக்கட்டும்!