உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 246 19/12/2023 செவ்வாய் நிலா உலா —————- நிலாவைப் பார்க்க நானும்.. உலாச் சென்று வந்தேன்! நலமும் கேட்டு வந்தேன்! நாடும் பார்த்து வந்தேன்! கண் மயங்கும் தோற்றம்! கவரும் உடலின் தேட்டம்! என்ன என்று சொல்ல! எங்கு வார்த்தை தேட! மெல்ல மெல்ல நகர்ந்து.. மேலே இருந்து இறங்கி… பள்ளம் மேடும் பார்த்து.. பாதம் அவள்மேல் சேர்த்து… உள்ளம் கொஞ்சம் கூச… உதடும் மெல்லக் காய… பள்ளம் மேடும் கடந்து.. பாய்ந்து செனறேன் அருகே! பாயும்போது கால் தடுக்கி.. பலமாய் விழுந்த அடியாலே.. வாயைத் திறந்து கத்திடவே.. வந்து நின்றாள் என் மனைவி! நிலா-உலா என தலைப்பு தர… நினைவுகளை நான் சுழலவிட.. நித்திரை என்னை ஆட்கொள்ள.. நிலவுக்கு நானும் உலா சென்றேன்! நன்றி “மதிமகன்”