உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 241 07/11/2023 செவ்வாய் தீப ஒளியே! —————— ஐப்பசி,கார்த்திகை இணையும் காலம்! அகிலமெலாம் தீபம் ஒளிரும் கோலம்! எம்பசி தீரவென இணைந்திடும் நேரம்! எப்போது தீருமென ஏங்கிடும் ஓலம்! ஐப்பசி மாதம் அமாவாசைத் திதியில், அணைந்து வருமவ் வழகிய திருநாள்! எத்திசை நோக்கினும் எரியும் தீபங்கள்! எழுச்சி தந்திடும் தீபாவளி பெருநாள்! கார்த்திகை மாதம் பிறந்திடும் பொழுதில், கனத்திடும் இதயம், நனைந்திடும் கண்கள்! நேர்த்தியாய் எங்கும் நிமிர்ந்திடும் தீபங்கள் நெஞ்சு கரைந்திடும் நீங்கா நினைவுகள்! கார்த்திகை மாத கார்த்திகைப் பெருநாள்! கண்ணாய் காத்திடும் கடவுளர் திருநாள்! நேந்திர மரந்தரும் தண்டுகள் மீததில், நிரையாய்,அணியாய்,ஒளிருமே தீபங்கள்! நன்றி மதிமகன்