உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்:237 10/10/2023 செவ்வாய் அலை ஓசை —————— இரவு பகல் இடையின்றி இரையும் கடலின் ஓசை! பரவும் கடல் பரப்பெங்கும், பரவி நிற்கும் இவ்வோசை! ஓயாத கடல் அலையின் “ஓ”வென்ற இசை ஓசை! தாயான கடல், உடலில் தாங்கி வரும் இவ்வோசை! வான் மீதே உலாவந்து, வந்தடையும் ஓர் ஓசை! தேன் சிந்தும் தமிழோசை, தேர்ந்து தரும் அலைஓசை! பாமுகமும், பல பிறவும் பகர்ந்து விடும் இவ்வோசை! மேகமெலாம் கடந்து வந்து மேதினி காண் இவ்வோசை! உலக மெலாம் இருந்தும் உடன் செய்தி தருமோசை! அலைபேசி எனும் பெயரில் ஆளும் இவ் அலையோசை! நன்றி “மதிமகன்”