உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்:234 19/09/2023 செவ்வாய் தலைப்பு / தலைப்பூ —————————- திருவுக்கு திருமதியே சிறப்பு! திருமதிக்கோ தலைப்பூ வனப்பு! தெருவுக்கு வேண்டும் தலைப்பு! தேடுவோர்க் குதவிடுமிக் குறிப்பு! செய்திக்கு சிறப்பே தலைப்பு! சேலைக்கு அழகு முகதலைப்பு கொய்த பூவுக்கோர் சிறப்பு- கோதை தலைமேல் இருப்பு! ஒற்றைப் பூவுமோர் வனப்பு! ஒன்றாய் கூட்டிடினும் சிறப்பு! கற்றை முடிதனில் பூ தரிப்பு, கவிஞர் கவிக்கோர் உயிர்ப்பு! தலையில் தினம்பூ வைப்பு, தரமாய் காட்டும் அமைப்பு! மலையில் மிளிரும் மலைப்பூ, மாற்றார் கண்ணில் மலைப்பு! தலைப்பு தாளுக்குச் சிறப்பு! தவறின் குறைந்திடும் மதிப்பு! தலைக்கு அழகாம் தலைப்பூ! தரமான வாழ்வின் தலைப்பு! நன்றி மதிமகன்