உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்:219 25/04/2023 செவ்வாய் ஆற்றல் ———- ஆற்றல் என்ற முனைப்பது, அறிவை முதலாய் கொண்டது! போற்றல் தூற்றல் ஏற்பது! போக்கும், வரவும் உணர்வது! பிறப்பில் ஆற்றல் வருவது, பிரமன் கொடுத்த வரமது! பொருப்பில் ஒளிரும் ஒளியது, பூவுக்கு மணமாய் இணைவது! கறையான், புற்று சமைப்பது, கருவில் உருவான அமைப்பது! இறைவன் கொடுத்த திறனது! இகத்தில் நாமும் சுவைப்பது! பயிற்சியால் ஆற்றல் பெறுவது, பலநாள் முயற்சியின் பலனது! உயர்ச்சி நோக்கிய உழைப்பது, உயர்த்தும் வாழ்வின் ஏணியது! கற்க, கேட்க, கதைசொல்ல, கவிதை இலக்கியம் உருவாக்க, உற்ற தோழனாய் உனக்காக, உடனே உதவிடும் உனதாற்றல்! நன்றி மதிமகன்