உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 211 21/02/2023 செவ்வாய் “சாதனை” ……………. செய்யும் தொழில் சிறப்பானால் சேர்வது என்றும் சாதனையே! மெய்யும் மனமும் ஒன்றானால் மேன்மை தருவது சாதனையே! உண்மையும் உழைப்பும் உறவாடின் உயர்வாய் கிடைப்பது சாதனையே! கண்ணெனக் கடமை செய்திட்டால் கனிவாய் கிடைத்திடும் சாதனையே! வேதனை மறந்து வேலை செய்யின் வெகுமதி யாவதும் சாதனையே! சோதனை வருகினும் சோராது செயற்படு-வந்திடும் சாதனையே! உள்ளத்தில் கள்ளம் அகன்றிட்டால் உயர்வாய் கிடைத்திடும் சாதனையே! பள்ளத்தில் வீழ்ந்து எழுந்தோர்க்கும் பரிசாய் கிடைப்பதும் சாதனையே! நன்றி மதிமகன்