உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்- 295 11/02/2025 செவ்வாய் “பங்கு நீ” ————- அழகு நிலா வந்ததென, அருகில் வந்து நின்றவளே! பழகு தமிழ் பாவையென பந்தம் பெருக்க வந்தவளே! பங்கு நீயென அவன் பகர, பாங்காய் ஏற்று நின்றவளே! சிங்கப் பெண் எனப் புகழ, சிலிர்த்து முகம் சிவந்தவளே! அண்ணல் அவன் சீதைபோல், அன்பு கொண்டு அழைத்தவளே! எண்ணம் நிறைய நிற்பவளே, எழில் உருவான பெண்ணவளே! திருமால் மனைவி திருமகளாய், தேவை உணர்ந்து அளிப்பவளே! அருமை என்றெவர் புகழ்ந்தாலும், அடக்கம் கொண்டு மிளிர்பவளே! சங்கம் வளர்த்த தமிழதுபோல், சந்தானம் செழிக்க வைப்பவளே! பங்கு நீயாய் வாய்த்திடவே-அவன் பாரினில் செய்த தவமென்ன! நன்றி மதிமகன்