உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 293 28/01/2025 செவ்வாய் கவியழகு ————- கரு ஒன்று மலரும்-பின் கை காலும் முளைக்கும்! உரு தானே நகரும்-பின் உணர் வதற்கு தெரியும்! உள் நின்று துவளும் -தான் உலா வரத் துடிக்கும்! சொல் சொல்லாய் சேரும்-பின் சோர் வின்றித் தொடரும்! எதுகை மோனை இணையும் எளிதாய் சந்தமும் சேரும்! புதிய கற்பனை தோன்றும்-நல் புத்துணர்வு தானே பிறக்கும்! காலமும் கனிந்து வரும்- சிசு கையில் வந்து சேரும்! கவி தன் பெயரென்றும்-தன் கவின் இதுவென்றும் கூறும்! பிரமன் படைப்பதில்-தினம் பிறப்ப திங்கு உயிர்கள்! கவிஞன் உழைப்பினில்-உலகு காண்பது அழகுக் கவிகள்! நன்றி மதிமகன்