உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 290 17/12/2024 செவ்வாய் இதயம் ———— இடது பக்க நெஞ்சினிலே, இரும்புக் கூட்டின் நடுவினிலே இதயம் என்ற பெயரினுடனே! இருப்பாய் வேலைப் பழுவுடனே! நான்கு அறைகொள் தாயகமே! நமக்கு நீயென்றும் நாயகமே! கூம்பு வடிவு அமைப்பகமே! குருதி தாங்கிடும் குதவகமே! இடதும் வலதும் தொடர்பில்லா, இயற்கை அமைப்பு உனதன்றோ! நல்லது கெட்டது கலக்காது-நம் அவன் செய்த அமைப்பன்றோ! உள்ளக வாசல் இரண்டுடனே, உனக்கு வாசல்கள் ஆறுண்டாம்! நல்லதும் கெட்டதும் காவிடவே, நாடியும், நாளமும் உதவிடுமாம்! பாரிருள் படரும் இரவினிலும் பகலவன் பணிசெய் பகலினிலும், ஈர்பன்னி ரெண்டு வேளையிலும் இயங்கிக் கொண்டு இருக்கிறாய்! நன்றி என்பது சிறுவார்த்தை நாம் உனக்கு சொல்வதற்கு! குன்றி விடாது உன் நலத்தை குறைவின்றி காப்ப துன்கடமை! நன்றி மதிமகன்