உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சம்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 266 21/05/2024 செவ்வாய் நிர்மூலம் ————- தூங்காத அவர் விழிகள் .. தூங்குகின்ற வேளையிலே.. ஆங்கார வெறிகொண்டு ., அழித்தீரே அவரிடத்தை! இறப்பின் பின் எல்லோரும், இறையாவார் என்றறிந்தும், மறத்தமிழர் அவரிடத்தை.. மாசாக்கி அழித்தது ஏன்? வித்துடல்கள் புதைத்த.. விளை நிலத்தை உழுது.. புத்தனின் போதனையை.. புஸ்வாணம் ஆக்கினரோ! மாங்காய் உருவம் கொள்.. மாணிக்க துவீபத்தின்…. பாங்கற்ற இச்செயலால்.. பரிகாசம் நீர் கொண்டீர்! புதைத்த அவருடல்கள்.. புத்துயிர் பெறுமென்றா.. நினைவிடத்தை நீரழித்து.. நிர்மூல மாக்கி விட்டீர்? நன்றி மதிமகன்