உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" மகாகவி "

" மகாகவி "

ரஜனி அன்ரன் (B.A) “ மகாகவி “ 11.09.2025 எட்டயபுரத்துக் கவிஞன் எட்டுத் திக்கிலும் தமிழ் முழக்கம் செய்ததீரன் புரட்சியென்ற வித்தைக்கு சொந்தக்காரன் பட்டை தீட்டினானே பைந்தமிழுக்கு அகவை முப்பத்தியொன்பதில் அழைத்தானே காலனும் விரைந்து புரட்டாதித் திங்கள் பதினொன்றிலே ! கன்னித்தமிழுக்கு மின்னல் வேகத்தில் சிந்துப்பாவாலே சந்தக்கவிகளை புரட்சிப் பாக்களாய் வடித்த புரட்சிக்கவிஞன் தெய்வப்பற்று தேசீயப்பற்று மண்பற்றென கவிகளை முழக்கிய கவிஞன் கவித்திறனாலே கனல்மூட்டிய புரட்சியாளன் ! இயற்கையை நேசித்த மானிடன் இலக்கணச் சட்டங்களை தகர்த்தெறிந்து இலகுநடையில் புதுக்கவிபடைத்த புதுமைக்கவி வசனக்கவியை தமிழில் அறிமுகமாக்கி கவிப்பரப்பை அழகுபடுத்திய கவிஞன் நூற்றாண்டு கடந்தும் நினைவில் நிற்கிறார்என்றும் ! https://www.youtube.com/watch?v=lXcaTvs1I1U