உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ப.வை. ஜெயபாலன்

ப.வை. ஜெயபாலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு277 வலி “வரன் ஒன்று லண்டனில் வாய்த்துளது என்று வாங்கி வைத்த Doctor பட்டத்தை கொண்டு விரைவாக என் பெற்றோர் ஏற்பாடு செய்து விமானத்தில் எனை ஏற்றி இங்கு வர வைத்தார் தரகர்வழி இனாம் என்று பல இலட்சம் பெற்று தாய்வழி காணி மனை சீதனமாய் பெற்று வருகை தந்த என்னை ஓர் வாடகை அறையில் வாழ்க்கையை தொடர வழி செய்தார் கணவர். கணக்காளர் வேலை என்று கதை விட்டார் என்று கண்டுகொண்டேன் நிறுவனத்தில் பணியாளன் இவனை பணக்காரர் எனக் கண்ட உறவாளர் வீட்டில் பல தடவை ஆயிரங்கள் பெற்று வர செய்தார் மண முறிவே வழி என்று பெற்றோர்க்கு சொல்ல மன்றாடி நின்றார்கள் சமாளித்து செல்ல மணவாழ்வின் பயனாக மகவுகள் மூவர் மணதுக்கு ஆறுதலாய் இவர்களே ஆவர். தாங்கேலா தொல்லைகளால் தற்கொலைக்கு முயன்றேன் தள்ளாடும் கடன் அடைக்க தொடர் வேலை செய்தேன் பாங்காக வளர்ந்திட்ட பையரும் துயரில் பட்டதினி போதுமென தனியாய் பிரிந்தேன் வாங்கிடவே மணமுறிவு கோடேறி வாதம் வை ஜீவநாம்சம் என கணவனோ வாதம் ஈங்குள்ள சட்டங்கள் பெண் என்றும் பாரா இதய வலி நம் நால்வர்க் என்றுதான் தீரும்? -ப.வை.ஜெயபாலன்-