உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ப.வை.ஜெயபாலன் இல 174

ப.வை.ஜெயபாலன் இல 174

இயந்திரத்தில் மின்வலுவால் ஆக்கம் ரம்மியமாய் வீறுகொண்ட மாற்றம் மந்திரத்தால் சிலைக்கு உரு ஏற்றும் மத நெறியும் காணவில்லை மாற்றம் அந்தரத்தில் சாகசங்கள் செய்ததும் அணு திறனால் ஏவுகணை பெய்தும் தன் திறத்தை காட்டும் எந்த நாடும் சார்ந்துளதே மனித சக்தி ஊடும, இறை பகவான் எங்கனுமே உருவாய் இருக்கின்றான் தொளிலாளி வடிவாய் நிறைவான உழைப்பாலே வீறாய் நிகரில்லா வல்லரசு பேரால் குறைவான ஊதியத்தில் கொணர்ந்து குடியேற்றி அவர் உழைப்பில் நிமிர்ந்து நிறவேறு பாட்டுக்குக்குள் ஒடுங்கி நிற்கின்றான் தொளிலாளி அடங்கி. பாதாள ரயில் சேவை பயணம் பாதை எல்லாம் நெடுஞ்சாலை வதனம் கீழ் ஓடும் சாக்கடை நீர் ஓட்ட கிண்டி குழாய் நிலத்தோடு நாட்ட வாழ்வெல்லாம் தன் உடலை வருத்தி வைத்தவனை போற்றுவம் மே தினத்தில் ஊழ்வினையே என்ற சொல்லை நிறுத்தி உழைப்பவனை வாழ வைப்போம் உயர்த்தி உழைப்பாளி