உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

போர் என்னும் அவலம் 754 19.03.2026

போர் என்னும் அவலம் 754 19.03.2026

செல்வி நித்தியானந்தன் போர் என்னும் அவலம் வல்லரசு என்ற போர்வை வந்ததே இன்று பார்வை வறுமை பஞ்சம் பட்டினி வலியானதே பலரது நிலமை வர்த்தகம் என்பது வியாபாரம் வஞ்சித்து அடிப்பது அநியாயம் வயிற்றுப் பசிக்கு வழியேது வசதியற்றவர் புசிக்க நிலையேது ஆயுத விற்பனை ஒருபுறம் ஆதரவு சேர்க்கும் மறுபுறம் ஆட்சி ஆலோசனை பயனேது ஆதிக்கம் காட்டுவதால் அழிவுதானே நிம்மதி இல்லா பலரது வாழ்வு நிழல் போல் தொடரும் யுத்தம் நித்தம் பலரது அழுகை சத்தம் நீட்சியா நீங்குமா புரியாத விடியல்