உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" போனும் போராட்டமும் "

" போனும் போராட்டமும் "

“ போனும் போராட்டமும் “.....கவி....ரஜனி அன்ரன் (B.A) 09.01.2025 கையுக்குள் பையுக்குள் அடக்கம் கண்கவரும் வண்ண மயம் கண்ணாடிக் கூண்டுக்குள் காட்டுகின்ற அதிசயம் கண்கவரும் காட்சிகள் தேடலுக்கு விருந்துகள் சின்னக் கருவிக்குள் பெரிய உலகம் கைபேசி ! தொடுதிரையின் வண்ணங்கள் தொட்டு விட்டால் யுகங்கள் இணையத்தின் வலைக்குள் இசைவுகள் ஒருமைப்பாடு காட்டி உலகை வலம்வர கைபேசியின் ஒளியில் கனவுகள் மிதக்கிறதே ! கைவிரல்களின் உரசலில் உறவுகளின் கூட்டிணைவில் காட்சிகள் பதிவாக்கலில் காலநேரத்தை மறக்கடிக்கும் சாலை போராட்டங்கள் போர்க்களங்களை காட்சிப்படுத்தும் ஆயுதம் தனிமையைப் போக்கிடும் கருவி உணர்வுகள் மறக்கப்பட தொடர்புகள் குறைய வாழ்வினை மாற்றிவிட்ட மாயக்காரி கைபேசி ! https://www.youtube.com/watch?v=WoVlyz7raDM