உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொன்.தர்மா

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம். இல.522. ****உன்னதமே உன்னதமாய்**** ஆறறிவு கொடுத்து,அகிலத்தில் முதலாக்கி- பாரினிலே பெருமைகொள், படைப்பதனைத் தந்ததுமே,உன்னதமே. வாழ்வுதனைக் கொடுத்து , வளங்கள் பல சேர்த்து, தாழ்விலா, தலை நிமிர்ந்து, நடைபோட வைத்ததுமே. கண்களுக்கு விருந்து அளித்து , கொடு நோய்க்கு மருந்தளித்து அண்டத்தின் அசைவுக்காய், அயராது விழித்திருந்து . தெண்டாட்டம் காணாது, தூணாகத் தோள் கொடுப்பு . உன்னதமே.. . விளக்கிற்கு எரி பொருளாய் , திரியதற்குத் தூண்டியுமாய் . இரதத்திற்கு , அச்சாணியாக, நாண் பிடிக்கும் நாயகனாய்த் , திகழ்வதுவும், .....உன்னதமே..... உலகிற்கே ஒருத்தராய் ,உயர்ந்திருக்கும்,உன்னதரே. உன்னதமே உன்னதமாய். பொன்.தர்மா