உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொன்.தர்மா

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவி நேரம். இல.519 *** உருமாறும் புதிய கோலங்கள்*** பள்ளிப் பருவமதில் ,பட்டாம் பூச்சிகள் போல் ஆட்டம். துள்ளித் திரிந்த வேளை,துடுக்காகச் சுற்றி ஓட்டம். அள்ளி அணைத்து அன்னை,அன்புப் பரிசு ,கொடுத்த காலம். வெள்ளி, விடியலிலே , வெறித்தோடியது போல், காட்சிக் கோலம். கலியுக காலமதில், உருமாறும் பல,பல தோற்றங்கள். நிலையில்லாத மானிடமோ, வழி தெரியாத் , தடுமாற்றங்கள். வாலறுந்த பட்டமாக, வானத்திலே சுழன்று ஆட்டங்கள். நூல் இழையில் தொங்கி நின்று , தேன் குடிக்கப் போராட்டங்கள். வாதம், பித்தம து , விறுவிறுப்பாய்த் தலைக்கேறும் , கட்டங்கள். வாழ்வில் நல்வழிகள், வதைபட்டுத், தூக்கிலேறும் பக்கம்கள். ஆலமது அமிர்தமாகும், அணுகுண்டு ,விளையாட்டுப் , பந்து ஆகும். ****உருமாறும் புதிய , புதிய கோலங்கள்**** பொன்.தர்மா