உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொன்.தர்மா

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம் இல .518 தலைப்பு **** அகப்பை. , அகம் + பை**** ------++++++---+++++---------- மனிதன் , இதில் ஒன்றை, உருவாக்கி அழகூட்டினான். மற்றொன்றை, இறைவன் உருவாக்கி ,உயிர் கொடுத்தான். பரிமாற்றம்,பாவனைகள்,பலதுமாய் , நிலை மாற்றம் பலவும் உண்டு. பகுத்தறிந்து பாவிப்பதில்,சிலரிடையே ,சில மாற்றமும் உண்டு. ( அன்பை) அள்ளிப் பரிமாறி, ஆழ் மனதில் இடம் பிடிகும், இதில் ஒன்று. கிள்ளிப் பரிமாறக்,குவளையுள்ளே கூத்தடிக்கும், மற்றொன்று. ஆத்திரம், அவதி கொண்டு, அடிதடி க்கும், தூக்குதலுண்டு. ஆறாத் துயரினாலே, அகப்பையுமோ, முறிபட்டு மாய்வதுண்டு. அன்பினை நிறைக்கையிலே, ஆனந்தம் , ஊற்றெடுத்துப் பெருகும். பண்பினை , இழக்கையிலே, பாவம் குடி கொள்ளும் கோட்டையாக , உரு மாறும். அது..........அக.......பை அன்புடை உபசரிப்பு, அது , அகப்பை பிடிக்கும் , அழகினிலே தெரியும். ஆக்கினை யால் உபசரிப்போ, அகப்பை வைத்துத் , துலாவி எடுக்கையிலே புரியும். """ பொன்.தர்மா'''''"