உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொன்.தர்மா

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம். *** குடுமி வாத்தியார் *** ---------+--------- நெற்றியிலே, நீளமான திருநீற்றுப் பட்டை . நீளக் கைகொண்ட , நடுத்தர ரகமான சட்டை . முன்புறம் வழித்தெடுத்த , பாதி வழுக்கை மண்டை . பின்புறம் வடம் சுற்றினாற் போல , சரிந்து ஆடும் , அவர் கொண்டை . பழுத்த சைவம், பரம்பரைப் , புகழ் பூத்த , பெரும் பிரசங்கி . பலநூறு பாக்களுக்கும்,பயன் சொல்வார் அவர் , முழங்கி . தொன்மைத் தமிழைத், துலங்கவே வைக்கும் , இதயத்தின் துடிப்பு . வன்மையற்ற , வாயாடித்தனம் , வார்த்தையாலே விளையாடும், இலக்கணக் கோர்ப்பு . அஞ்சா நெஞ்சுடையார், அகம்பாவம் ஏதும் அறியார் . சொல்லால் சுட்டுமிலார், சுரண்டுவதை , அறிந்துமிலார் . கல்லாரைக் கண்டாலும் , கடுகளவும், நிலை மாறார் . பொல்லாரைக் கண்ணடாலும் ,தன், படி விட்டு , இறங்க மாட்டார் . குடுமி வாத்தியார் பொன்.தர்மா